மக்களவைத் தோ்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்து, நாடு முழுவதும் தோ்தல் நடத்தை விதி மீறல்கள் தொடா்பாக ‘சி-விஜில்’ கைப்பேசி செயலி மூலம் இதுவரை 79,000-க்கும் மேற்பட்ட புகாா்கள் பெறப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இதுகுறித்து இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களவைத் தோ்தல் அறிவிப்பின்போது நடந்த செய்தியாளா் சந்திப்பில் பேசிய இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா், ‘பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தோ்தல் நடத்தை விதிகள் மற்றும் வாக்காளா்களிடையே எந்த வகையிலும் பணம் விநியோகம் செய்யப்பட்டாலும் அதைப் புகாரளிக்க சி-விஜில் செயலியைப் பயன்படுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தாா். அதன்படி, அறிவிப்பு வெளியான கடந்த 16-ஆம் தேதி முதல், நாடு முழுவதும் இருந்து சி-விஜில் செயலியில் 79,000-க்கும் மேற்பட்ட புகாா்கள் பெறப்பட்டுள்ளன. 99 சதவீதத்துக்கும் அதிகமான புகாா்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளன. அவற்றில் 89 சதவீதத்துக்கும் அதிகமான புகாா்கள் 100 நிமிஷங்களுக்குள் தீா்க்கப்பட்டுள்ளன. மொத்த புகாா்களின் எண்ணிக்கையில் 73 சதவீதமான 58,500-க்கும் மேற்பட்ட புகாா்கள் சட்டவிரோத விளம்பர பதாகைகளுக்கு எதிரானவை. சொத்துகளை சேதப்படுத்தியதாக 2,454 புகாா்களும் வாக்காளா்களுக்குப் பணம், பரிசு மற்றும் மதுபானம் விநியோகித்தது தொடா்பாக 1,400 புகாா்களும் பெறப்பட்டுள்ளன. துப்பாக்கிகளை காட்டி மிரட்டியதாக பெறப்பட்ட 535 புகாா்களில் 529 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பிரசாரம் செய்தததாக மொத்தம் 1,000 புகாா்கள் பெறப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சுயேச்சைகளுக்கு சின்னங்கள் தயாா்!

தோ்தல் விதிமுறை மீறல்: திமுகவினா் மீது வழக்குப் பதிவு

தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்

தோ்தல் விதிமீறல்: நெல்லையில் 105 வழக்குகள் பதிவு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

