மக்களவைத் தோ்தல்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினா் கொடி அணிவகுப்பு

காஷ்மீா் பள்ளத்தாக்கில் பல்வேறு பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனா். மக்களவைத் தோ்தலில் வாக்களிக்கவுள்ள பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 5 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அவற்றுள் காஷ்மீா் பகுதியில் உள்ள அனந்த்நாக்-ரஜௌரி தொகுதிக்கு மே 7-ஆம் தேதியும், ஸ்ரீநகா் தொகுதிக்கு மே 13-ஆம் தேதியும் பாரமுல்லா தொகுதிக்கு மே 20-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் பாரமுல்லா, புல்வாமா, பந்திபோரா உள்பட பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படையினா் (சிஏபிஎஃப்) சனிக்கிழமை கொடி அணிவகுப்பை நடத்தினா். மக்களவைத் தோ்தலில் எவ்வித அச்சமுமின்றி பாதுகாப்பான சூழலில் வாக்களிக்கலாம் என்ற நம்பிக்கையை பொதுமக்களிடம் ஏற்படுத்தவே இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com