திருமணம் செய்ய வற்புறுத்திய இளம் பெண்ணை கொன்ற இளைஞர்!

திருமண வலியுறுத்தலால் கொலை: இளைஞர் கைது!
கோப்புப் படம்
கோப்புப் படம்

பால்கர்: மகாராஷ்டிரத்தில் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய இளம் பெண்ணை இளைஞர் கழுத்து அறுத்து கொன்ற சம்வம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருவரும் திருமணம் செய்யாமல் (லிவ்-இன் பார்ட்னர்) ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ள இளம்பெண் வலியுறுத்தியதால் இச்சம்வம் நடந்துள்ளது.

பால்கர் மாவட்டத்தில் 22 வயது பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதற்காக, அவரது லிவ்-இன் பார்ட்னர் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரியவந்ததையடுத்து, கொலையாளியை சில நாள்கள் கழித்து மேற்கு வங்கத்தில் கைது செய்தனர்.

பால்கர் மாவட்டத்தின் தஹானு நகரில் வாடகைக்கு எடுத்திருந்த அறையில் பெண்ணின் அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து மார்ச் 15ஆம் தேதியன்று குற்றம் வெளிச்சத்திற்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட மினாசுதீன் அப்துல் அஜிஜ் முல்லா(26) என்ற ரவீந்திர ரெட்டி மேற்கு வங்கத்தின் தெற்கு பர்கானாஸ் மாவட்டத்தில் மார்ச் 22ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாசாஹேப் பாட்டீல் தெரிவித்ததாவது:

அனிஷா பரஸ்தா கதுன் என்ற பெண், மார்ச் 15ஆம் தேதி, தஹானுவில் உள்ள சால் பகுதியில் கொலை செய்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், கழுத்தை நெரித்ததால் மரணம் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இது கொலை வழக்காக மாற்றப்பட்டது.

விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட முல்லா மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்பதையும், தஹானுவில் ஒரு அறையை வாடகைக்கு எடுப்பதற்காக ரவீந்திர ரெட்டி என்ற பெயரை மாற்றிக் கொண்டதாகவும், பாதிக்கப்பட்டவர் தனது மனைவி என்று பாசாங்கு செய்ததை காவல் துறையினர் கண்டறிந்தனர்.

இது குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பங்கஜ் ஷிர்சாத் தெரிவித்ததாவது:

குற்றம் சாட்டப்பட்டவர், பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தியதால் தனது லிவ்-இன் பார்ட்னரை கொன்றதாக தெரிவித்தார். ஏழு நாட்கள் தொடர்ச்சியான முயற்சிகளுக்குப் பிறகு, மார்ச் 22ஆம் தேதி முல்லாவைக் கைது செய்தனர்.

இதனையடுத்து பால்கர் நீதிமன்றம் முல்லாவை ஏப்ரல் 2ஆம் தேதி வரை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com