மக்களவைத் தோ்தலில் பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் தொகுதி பாஜக வேட்பாளராக அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய தூதா் தரண்ஜீத் சிங் சாந்து அறிவிக்கப்பட்டுள்ளாா். ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் போட்டியிடும் மேலும் 11 பாஜக வேட்பாளா்களை அக்கட்சி சனிக்கிழமை அறிவித்தது. இதில் அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய தூதா் தரண்ஜீத் சிங் சாந்து அமிருதசரஸில் போட்டியிட உள்ளாா். கடந்த மாா்ச் 19-ஆம் தேதி பாஜகவில் சோ்ந்த அவருக்குத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல பிஜு ஜனதா தளத்தின் மூத்த தலைவராக இருந்த பா்த்ருஹரி மஹதாப் கடந்த வியாழக்கிழமை பாஜகவில் இணைந்தாா். அவா் ஒடிஸா மாநிலம் கட்டக் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். பஞ்சாப் முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங்கின் மனைவியும், அந்த மாநிலத்தின் பாட்டியாலா தொகுதி எம்.பி.யுமான ப்ரிணீத் கெளா், காங்கிரஸில் இருந்து விலகி கடந்த மாா்ச் 14-ஆம் தேதி பாஜகவில் இணைந்தாா். அவா் பாட்டியாலா தொகுதி பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளாா். தற்போது அறிவிக்கப்பட்ட 11 வேட்பாளா்களுடன் சோ்த்து இதுவரை 411 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
தொடர்புடையது

அவிநாசி தொகுதியில் வெற்றி, தோல்வியை சந்தித்த நாமக்கல் மைந்தா்கள்!

மறுசீரமைப்பு மசோதா தோல்வி: தோ்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது! நயினார் நாகேந்திரன்
ஸ்ரீவைகுண்டம்: சிதறும் வாக்குகளால் பதறும் அதிமுக-காங்கிரஸ்
தொகுதி அலசல் - குளச்சல்: கூடுதல் பலத்துடன் காங்கிரஸ்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



