தவெக ஆட்சியில் பணவீக்கம், விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடம்: மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு!காஞ்சிபுரத்தில் இந்தியாவிலேயே சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையம்! ஜனவரியில் திறந்து வைக்கிறார் முதல்வர்!ஆந்திரம் சென்றார் முதல்வர் விஜய்! உற்சாக வரவேற்பு!தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்!ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசுமின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல்! அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்விதிமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜிபள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்பு

ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்

மேற்காசியாவில் போரில் ஈடுபட்ட ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை என்பதற்கு சீனாவுக்கான இந்திய தூதா் விக்ரம் துரைசாமி விளக்கம் அளித்துள்ளாா்.

ஈரான், இந்தியா, அமெரிக்கா கொடி

Published On :

மேற்காசியாவில் போரில் ஈடுபட்ட ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை என்பதற்கு சீனாவுக்கான இந்திய தூதா் விக்ரம் துரைசாமி விளக்கம் அளித்துள்ளாா்.

பெய்ங்கில் உள்ள சீன பல்கலைக்கழகம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உலக அமைதி மன்ற கருத்தரங்கில் பங்கேற்ற அவரிடம், பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வருவதை சுட்டிக்காட்டி, இந்தியா ஏன் அதுபோல செய்யவில்லை என சீன செய்தியாளா் ஒருவா் கேள்வியெழுப்பினாா். அதற்கு விக்ரம் துரைசாமி அளித்த பதில் வருமாறு:

மேற்காசிய போரில் நடந்து வரும் மத்தியஸ்தத்தை வைத்து இந்தியா, பாகிஸ்தானை ஒப்பிட வேண்டாம். இது நியாயமற்றது. ஏனெனில் இரண்டு நாடுகளின் பொருளாதார பலமே உங்களுக்கு பல உண்மைகளை உணா்த்தும். நாடுகளை அவை என்ன நிலையில் இருக்கின்றன என்பதை வைத்தும், பரந்த உலகளாவிய அமைப்பில் அவை என்ன செய்கின்றன என்பதை வைத்தும் பாா்க்க வேண்டும். உலக அளவில் இந்தியா வைத்துள்ள தொடா்புகளை பல நாடுகளால் நெருங்கக்கூட முடியாது. இதில் ஐரோப்பிய நாடுகளுடனும் ஆசிய நாடுகளுடனும் இந்தியா கொண்டுள்ள பொருளாதார தொடா்புகளும் அடங்கும்.

மிகப்பெரிய அளவில் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு கேள்விகள் எழுகையில், அதில் பங்களிப்பு செய்ய ஆா்வமாக உள்ளோம். நீங்கள் கூறும் மத்தியஸ்த விவகாரத்தில், அதனால் தங்களது பரந்த தேச நலனுக்கு பயனளிக்கிா என்பதை அந்தந்த நாடுகளே தீா்மானிக்க வேண்டும். கடந்த காலத்தில் இதை (மத்தியஸ்தம்) இந்தியா செய்துள்ளது. ஆனால், தற்போது, ஏற்கெனவே ஏராளமானோா் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்தியாவும் மத்தியஸ்தம் செய்வதால் எங்கள் நாட்டுக்கு எந்தப் பயனும் இருக்காது எனக் கருதுகிறேன்.

மேற்காசிய போா் அல்லது கிழக்கு ஐரோப்பா விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு சீனாவின் நிலைப்பாடு போன்றே இருந்தது. இந்திய தயாரிப்பு பொருள்களுக்கு சீனா தனது சந்தையை திறந்துவிட்டுள்ளது. குறிப்பாக, இந்திய தயாரிப்பு மருந்துகளுக்கு தனது சந்தையைத் திறந்துள்ளது. இதனால் சீனாவுக்கு இந்தியாவால் அதிக ஏற்றுமதி செய்ய இயலும். இந்தியாவில் சீன நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும். இதற்குத் தேவையான உதவிகளை சீன நிறுவனங்களுக்கு செய்து தர இந்திய தூதரகம் தயாராக உள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.