இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பிஜு தனதா தளத்தில் இணைந்த பாஜக முன்னாள் தலைவர், காங். எம்.எல்.ஏ.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிரஞ்சிப் பிஸ்வாலும் ஆதரவாளர்களுடன் பிஜு ஜனதா தளதில் இணைந்தார்.

News image
Updated On :31 மார்ச் 2024, 1:15 pm

DIN

பாஜக முன்னாள் தலைவர் சுகந்த நாயக் பிஜு ஜனதா தளத்தில் இன்று (மார்ச் 31) இணைந்தார்.

இதேபோன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிரஞ்சிப் பிஸ்வாலும் தனது ஆதரவாளர்களுடன் இன்று பிஜு ஜனதா தளதில் இணைந்தார்.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாள்களே உள்ள நிலையில், பிஜு ஜனதா தளத்தில் இரு பெரிய கட்சிகளைச் சேர்ந்த இருவர் இணைந்துள்ளனர்.

ஒடிசா தலைநகரான புவனேஸ்வரத்திலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிரஞ்சிப் பிஸ்வால் என்பவர் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான பசந்த பிஸ்வாலின் மகனாவார். காங்கிரஸ் கட்சி சார்பில் 2004, 2014 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

சுகந்த நாயக், ஆரம்பகாலகட்டத்தில் பிஜு ஜனதா தளத்தில் இருந்தவர். 2014 சட்டப்பேரவைத் தேர்தலில் நீலகிரி எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 2019-ல் பாஜகவில் இணைந்தார். தற்போது மக்களவைத் தேர்தலையொட்டி மீண்டும் பிஜு ஜனதா தளத்தில் இணைந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.