கட்சிரோலி: மகாராஷ்டிரம்-சத்தீஸ்கர் எல்லையில் நக்சலைட்டுகளின் முகாமை கட்சிரோலி போலீசார் முறியடித்து, அங்கிருந்து ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் மற்றும் பிற பொருட்களை கைப்பற்றியதாக அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, நாசகார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, மகாராஷ்டிரா-சத்தீஸ்கர் எல்லையில், சுடின்டோலா கிராமத்திற்கு அருகே, ஆயுதம் ஏந்திய நக்சலைட்கள் சிலர் முகாமிட்டுள்ளதாக, வெள்ளிக்கிழமை இரவு போலீசாருக்கு உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தது.
இதயைடுத்து நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான சிறப்புப் படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
சனிக்கிழமை காலை, நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான சிறப்புப் படையினர் 450 மீட்டர் உயரமுள்ள மலை உச்சியை அடைந்தபோது, அங்கிருந்து நக்சலைட்டுகள் தப்பி ஓடிவிட்டனர்.
மேலும் மலை உச்சியில் ஒரு நக்சல் முகாம் கண்டுபிடிக்கப்பட்டது, மிகவும் கடினமான நிலப்பரப்பு மற்றும் அலை அலையான மலைகளைப் பயன்படுத்தி நக்சலைட்டுகள் அந்த இடத்திலிருந்து தப்பித்ததாகவும், அந்த முகாமில் வைக்கப்பட்டிருந்த டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள், கார்டெக்ஸ் கம்பிகள், பேட்டரிகள், வாக்கி-டாக்கி சார்ஜர்கள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன, பின்னர் முகாம் அழிக்கப்பட்டது என்று அந்த அதிகாரி கூறினார்.
இதையடுத்து சத்தீஸ்கர் எல்லையில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகாராஷ்டிரம் இடைத்தேர்தல்: 9 மணி நிலவரம்!

கா்நாடக எல்லையில் ரூ.22.82 லட்சம் பறிமுதல்

நீரிழிவு இருந்தால் கருத்தரிக்க முடியாதா? ஐவிஎஃப் சிகிச்சை செய்ய முடியாதா??

பிகாரில் நக்சல் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை



