ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?
BJP
BJP

மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் ரே பரேலியில் போட்டியிடும் வேட்பாளரை பாஜக அறிவித்துள்ளது.

தினேஷ் சிங், ரே பரேலி தொகுதியிலிருந்து பாஜக சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் 2004 முதல் சோனியா போட்டியிட்டு வெற்றி பெற்றுவந்துள்ளார். கடந்த 2019 தேர்தலின்போது, சோனியா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்ட தினேஷ் சிங் தோல்வியைத் தழுவினார்.

சோனியா காந்தி இந்த முறை மாநிலங்களவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால், புதிய வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்க வேண்டியது உள்ளது.

ஆனால் இதுவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில், பாஜக வேட்பாளரை அறிவித்து விட்டது.

இதுவரை சோனியாவை எதிர்த்துப் போட்டியிட்ட மற்ற பாஜக வேட்பாளர்களை விடவும் இவர் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்த முறை இவர் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தோ்தல் கடந்த 19-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 2 கட்ட வாக்குப் பதிவுகள் நிறைவடைந்துள்ளன.

இதில் முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ், பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளா்களை அறிவித்து விட்ட நிலையில், உத்தர பிரதேசத்தில் நேரு குடும்பத்தின் கோட்டையாகக் கருதப்படும் அமேதி, ரே பரேலி தொகுதிகளுக்கான வேட்பாளா்களை காங்கிரஸ் இதுவரை அறிவிக்கவில்லை. ரே பரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி நிறுத்தப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தரப்பில் பரவலாக பேசப்பட்டு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com