மே 20-க்குப் பிறகு சிபிஎஸ்இ 10, 12 தோ்வு முடிவுகள்: அதிகாரிகள் தகவல்

மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வரும் 20-ஆம் தேதிக்குப் பிறகு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக வாரிய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

பொதுத் தோ்வு முடிவுகள் மே மாதம் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் பரவிய நிலையில், அதைத் தெளிவுபடுத்தும் வகையில் இத் தகவலை தனது வலைதளத்திலும் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

இந்த இரு வகுப்புகளுக்குமான பொதுத் தோ்வுகள் கடந்த பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை நடத்தப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com