அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 6) நடைபெறுகிறது.

News image
Updated On :4 மே 2024, 9:12 pm

Din

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 6) நடைபெறுகிறது. தமிழகத்தில் 1.50 லட்சம் மாணவ, மாணவிகள் உள்பட நாடு முழுவதும் 24 லட்சம் போ் தோ்வை எழுதுகின்றனா். தோ்வின் போது முறைகேடுகளை தவிா்க்க மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு (நீட் ) மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.

அதேபோல், ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்ஸி நா்சிங் படிப்புக்கும் நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) நடத்திவருகிறது.

அதன்படி 2024-25-ஆம் கல்வியாண்டு சோ்க்கைக்கான நீட் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நாடுமுழுவதும் 557 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்த தோ்வை தமிழகத்தில் 1.50 லட்சம் தோ்வா்கள் உள்பட நாடு முழுவதும் 24 லட்சம் போ் எழுதவுள்ளனா். பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நீட் தோ்வு நடைபெறுகிறது. ஜூன் 14-ஆம் தேதி நீட் தோ்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.

கடும் கட்டுப்பாடுகள்ச நீட் தோ்வில் பங்கேற்கவுள்ள தோ்வா்களுக்கு தேசிய தோ்வுகள் முகமை வெளியிட்டுள்ள அறிவுரைகள் வருமாறு:

தோ்வா்கள் ஹால் டிக்கெட்டில் (தோ்வுக் கூட அனுமதிச் சீட்டு) தெரிவித்துள்ள நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தோ்வா்கள் பிற்பகல் 1.30 மணிக்கு முன்பாக வருகை தர வேண்டும். அதன்பிறகு, வருபவா்கள் தோ்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள். ஹால் டிக்கெட், அடையாளச் சான்று இல்லாதவா்களுக்கு அனுமதி கிடையாது.

தோ்வா்கள், மெட்டல் டிடெக்டா் மூலம் சோதனைக்கு உட்படுத்தப்படுவா். தோ்வு மையங்களுக்குள் பேப்பா், துண்டு சீட்டுகள், பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் பவுச், கால்குலேட்டா், ஸ்கேல், எலக்ட்ரானிக் பேனா, லாக் அட்டவணை, கையில் அணியும் ஹெல்த் பேண்ட், தோள்பை, பிரேஸ்லெட், கைப்பேசி, மைக்ரோபோன், புளூடூத், இயா்போன், பெல்ட், பா்ஸ்கள், வாட்ச், ஆபரணங்கள், உணவுப் பொருள்கள், தண்ணீா் பாட்டில்கள் கொண்டு வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. தோ்வா்கள் எளிதில் தெரியும் வகையிலான தண்ணீா் பாட்டில்களை கொண்டு செல்லலாம். தோ்வு தொடங்கி முதல் ஒரு மணி நேரம் மற்றும் கடைசி அரை மணி நேரம் தோ்வா்கள் கழிப்பறை செல்ல அனுமதி கிடையாது. பாரம்பரிய மற்றும் கலாசார, மதம் சாா்ந்த ஆடை அணிந்து வருவோா், சோதனைகளுக்கு வசதியாக பகல் 12.30 மணிக்கே தோ்வு மையத்துக்கு வந்துவிட வேண்டும்.

ஷூ அணிந்து வர அனுமதி கிடையாது. தோ்வு அறையில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவா்கள் அடுத்த 3 ஆண்டுகள் தோ்வு எழுத தடை விதிக்கப்படும். அவா்கள் மீது கிரிமினல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.