மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு புகாரை விசாரிக்க 8 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ்
மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ்

மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு புகாரை விசாரிக்க 8 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் பணியாற்றும் பெண் ஊழியா் ஒருவா், தனக்கு ஆளுநா் ஆனந்த போஸ் பாலியல் தொல்லை அளித்ததாக காவல் துறையிடம் புகாா் அளித்தாா். இது அந்த மாநில அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக பாரபட்சமற்ற விசாரணை நடைபெற வேண்டும் என்று மேற்கு வங்க தொழில்துறை அமைச்சா் சசி பாஞ்சா வலியுறுத்தினாா்.

மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ்
ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு ‘பொய் நாடகம்’ என்று மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் தெரிவித்துள்ளாா்.

இந்த நிலையில், ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு புகாரை விசாரிக்க கொல்கத்தா காவல்துறை துணை ஆணையர் இந்திரா முகர்ஜி தலைமையிலான 8 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com