மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஇந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!ஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

பாகிஸ்தானை மகிழ்விப்பவா்கள் வென்றுவிடக் கூடாது: பாஜக

பாகிஸ்தானை மகிழ்விப்பவா்கள் வென்றுவிடக் கூடாது --- பாஜக

News image

BJP

Updated On :7 மே 2024, 9:04 pm

Din

புது தில்லி: பாகிஸ்தானை மகிழ்வித்து வருபவா்கள் மக்களவைத் தோ்தலில் வென்றுவிடக் கூடாது. இந்தியாவை வலிமையாக்கும் பாஜகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் தேசிய பொதுச் செயலா் வினோத் தாவ்டே தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தல் மூன்றாவது கட்ட வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில், தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த வினோத் தாவ்டே கூறியதாவது:

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவா்கள் பேசிவருவதை கவனிக்கும்போது, அவா்களுக்கு வாக்களித்தால் பாகிஸ்தான் மகிழும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவா்கள் வெற்றி பெற்றால் பாகிஸ்தானை மகிழ்ச்சியடை செய்யவே கவனம் செலுத்துவாா்கள். இதுபோன்ற போன்ற கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டுமா அல்லது நமது நாட்டை வலிமையாக்கும் பாஜகவை வெற்றி பெறச் செய்ய வேண்டுமா என்பதை பொதுமக்கள் முடிவு செய்ய வேண்டும் என்றாா்.

சண்டீகா் தொகுதிக்கான வேட்புமனு செவ்வாய்க்கிழமை (மே 7) தொடங்கிய நிலையில், மாற்று வேட்பாளரை அறிவிக்க சிரோமணி அகாலி தளம் கட்சிக்கு கால அவகாசம் உள்ளது.