குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

குஜராத்தில் தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள் பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன்  வாக்குச்சாவடி முகவர்கள்-
காங்., குற்றச்சாட்டு

வாக்குச்சாவடிகளில் கட்சி சின்னங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், குஜராத் மாநிலத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் பாஜக முகவர்கள் தாமரை சின்னம் மற்றும் பாஜக தலைவர்களின் முகம் பொறித்த பேனாக்களுடன் பணியில் ஈடுபட்டதாக அம்மாநில காங்கிரஸ் தலைவரும், எம்பியுமான சக்தி சிங் கோஹில் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், காலை 8 மணிக்கு தேர்தல் ஆணையரகத்தை 'டேக்' செய்து ’எக்ஸ்’ வலைதளத்தில் விடியோ வெளியிட்டேன்.

ஆனால், நான் 11 மணிக்கு வாக்களிக்க சென்ற போதும் வாக்குச் சாவடி அலுவலர் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், இப்படிதான் தேர்தலில் போட்டியிட வேண்டுமா?. பாஜகவிற்கு ஒரு சட்டம்? காங்கிரஸுக்கு ஒரு சட்டமா? என குஜராத் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். எத்தனை தந்திரங்கள் செய்தாலும் இந்தமுறை குஜராத் மக்கள் பாஜகவிற்கு பாடம் புகட்டுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com