கேதார்நாத் யாத்திரை: முதல் நாளில் 29,000 பக்தர்கள் தரிசனம்

கேதார்நாத் யாத்திரை: முதல் நாளில் 29,000 பக்தர்கள் தரிசனம்
படம் | ஏ என் ஐ

உத்தராகண்ட்டில் புகழ்பெற்ற கேதார்நாத் கோயில் மற்றும் கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய கோயில்களின் நடை நேற்று திறக்கப்பட்டது.

கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு கோயில்களும் சார்தாம் என்று அழைக்கப்படுகிறது. இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற இந்த கோயில்கள் ஆண்டுதோறும் ஆறு மாதங்கள் பக்தர்களின் தரிசனத்துக்கான திறக்கப்பட்டு, குளிர்காலம் தொடங்கும்போது கோயில்களின் நடை மூடப்படுகின்றது.

அதன்படி, கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத் ஆகிய மூன்று கோயில்களின் நடை நேற்று (வெள்ளிக்கிழமை) பக்தர்களுக்காக திறக்கப்பட்டது.

கேதார்நாத் புனித யாத்திரை நேற்று (மே. 10) முதல் தொடங்கிய நிலையில், முதல் நாளில் 29,000 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய வழிநெடுகிலும் 125 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மாநில நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com