‘எதிர்காலம் எண்ணற்ற சாத்தியங்களைக் கொண்டுள்ளது’ : சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மோடி வாழ்த்து!

சிபிஎஸ்இ தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மோடி வாழ்த்து
கோப்புப் படம்
கோப்புப் படம்ANI

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியான நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை மாணவர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் மோடி, “அன்புள்ள தேர்வுபோராளிகளே, சிபிஎஸ்இ 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்! உங்களது சாதனை மற்றும் இடைவிடாத அர்ப்பணிப்புக்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அதே போல உங்களுக்கு ஆதரவளித்த குடும்பத்தினர் மற்றும் அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களின் உழைப்பையும் நான் மதிக்கிறேன். இந்த வெற்றிக்கு அவர்களின் ஆதரவு முக்கியமானது. எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள்!” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு பதிவில், “12-ம் வகுப்பு தேர்வில் இன்னும் அதிகமாக சாதித்திருக்கலாம் என நினைக்கும் அறிவுமிக்க மாணவர்களுக்கு- நினைவில் கொள்ளுங்கள். இது வாழ்க்கையின் ஒரு மைல்கல் மட்டுமே. உங்களின் எதிர்காலம் எண்ணற்ற சாத்தியங்களைக் கொண்டுள்ளது. உங்களை ஆர்வமூட்டும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். உங்களின் தனித்திறமை வெற்றி மற்றும் நிறைவுக்குக் கூட்டிச் செல்லும். தொடர்ந்து முயற்சியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 87.98% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகள் www.cbse.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com