
உங்கள் ஒருவரின் வாக்கு ஜனநாயக உரிமையை பாதுகாப்பது மட்டுமின்றி, உங்கள் குடும்பத்தின் தலைவிதியை மாற்றும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 96 தொகுதிகளில் 4-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அனைத்து மக்களும் வாக்களிக்க கோரி ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“இன்று நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கிறது. முதல் மூன்று கட்ட வாக்குப்பதிவின் முடிவில், வருகின்ற ஜூன் 4-ஆம் தேதி ‘இந்தியா’ கூட்டணியின் அரசு அமையும் என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது.
உங்கள் ஒருவரின் வாக்கு, ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பது மட்டுமின்றி உங்கள் குடும்பத்தின் தலைவிதியை மாற்றும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஒரு வாக்கு இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ. ஒரு லட்சம் வழங்கும், ஒரு வாக்கு ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ. ஒரு லட்சம் வழங்கும்.
அதனால் அதிகளவிலான மக்கள் வீட்டைவிட்டு வந்து வாக்களியுங்கள். நாட்டில் உள்ள பிரச்னைகளின் அடிப்படையில் திசைதிருப்பும் முயற்சிக்கு வாய்ப்பளிக்காமல் வாக்களிப்போம் என்பதை காட்டுங்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா உள்ளிட்ட 9 மாநிலங்களில் 95 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதி என மொத்தம் 96 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி, 11 மணி நிலவரப்படி 24.87 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.