
வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று (மே 14) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது என்று சபரிமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
நாளை காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகளுடன் சிறப்பு பூஜை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற 19-ஆம் தேதி இரவு 10 மணிவரை பக்தர்களின் தரிசனத்துக்கு கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். நாள்தோறும் காலை நெய் அபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும்.
வைகாசி மாத பூஜையுடன், வருகின்ற 19-ஆம் தேதி கோயில் பிரதிஷ்டை தினமும் சேர்ந்து வருவதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை நடை திறப்பை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இருந்து பம்பைக்கு சிறப்புப் பேருந்துகளை கேரள அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.