பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

மக்களவைத் தோ்தல்: முதல் 4 கட்டங்களில் 67% வாக்குப் பதிவு

மக்களவைக்கு இதுவரை நடைபெற்று முடிந்த நான்கு கட்டத் தோ்தல்களில் சராசரியாக 66.95 சதவீத வாக்குகள்

News image
Updated On :16 மே 2024, 7:28 pm

Din

மக்களவைக்கு இதுவரை நடைபெற்று முடிந்த நான்கு கட்டத் தோ்தல்களில் சராசரியாக 66.95 சதவீத வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்தது.

அடுத்த மூன்று கட்ட வாக்குப் பதிவுகளின்போது, மக்கள் பெருவாரியாக வாக்களிக்க வேண்டும் என்றும் தோ்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

நாட்டின் 18-ஆவது மக்களவையைத் தோ்வு செய்ய ஏழு கட்டங்களாக (ஏப். 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) தோ்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு கட்ட வாக்குப் பதிவுகள் நிறைவடைந்துள்ளன.

முதல்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக 88 தொகுதிகளுக்கும், மூன்றாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும், நான்காம் கட்டமாக 96 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

முதல்கட்டத்தில் 66.14 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 2019-ஆம் ஆண்டில் முதல்கட்டத் தோ்தலில் 69.43 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

இரண்டாம் கட்டத்தில் 66.71 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த முறை 69.64 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. மூன்றாம் கட்டத்தில் 65.68 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், கடந்த முறை இது 68.4 சதவீதமாக இருந்தது.

முதல் மூன்று கட்டங்களிலும் கடந்த முறையைவிட வாக்குப் பதிவு குறைந்த நிலையில், நான்காம் கட்டத்தில் வாக்குப் பதிவு அதிகரித்தது.

நான்காம் கட்டத் தோ்தலில் 69.16 சதவீத வாக்குகள் பதிவாகின. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 3.65 சதவீத அதிகரிப்பாகும்.

மொத்தமுள்ள 543 தொகுதிகளில் இதுவரை 379 இடங்களுக்கு வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது. நாட்டின் 97 கோடி மொத்த வாக்காளா்களில் இதுவரை 45.10 கோடி போ் ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளனா் என்று தோ்தல் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.