ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

தில்லிக்காக நான் செய்த பணிகளை மதிப்பிட்டு வாக்களியுங்கள் என்றார் அரவிந்த் கேஜரிவால்.
ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

தில்லிக்காக நான் செய்த பணிகளை மதிப்பிட்டு வாக்களியுங்கள் என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

கிழக்கு தில்லியிலுள்ள துக்ளகாபாத் பகுதியில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பேரணியில் ஈடுபட்டார்.

அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், தில்லிக்கான என் பணிகளைப் பார்த்து ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களியுங்கள். உங்கள் குழந்தைகளுக்காக நல்ல பள்ளிகளைக் கட்டி அவர்கள் வாழ்வை மேம்படுத்தியதற்காக பிரதமர் மோடி என்னை சிறைக்கு அனுப்பியுள்ளார். சிறிய கட்சியைச் சேர்ந்த சிறிய மனிதன் நான். என்னை கைது செய்து சிறையில் அடைத்து நான் திறந்த பள்ளிகளை மூட வேண்டும் என்பதே அவர்களின் சதி.

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்
மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

பிரதமர் மோடி தலைமையில் 10 ஆண்டுகளாக ஆட்சி நடக்கிறது. ஆனால் அதில் என்ன அனுபவங்கள் கிடைத்தது என்பது உங்களுக்குத் தெரியும். ஜுன் 4ஆம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் எனப் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com