

அசாமில் ரூ.105 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலம், கச்சார் மாவட்டத்தில் அண்டை மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 10.333 கிலோ ஹெராயினை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இத்தகவலை அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா வெளியிட்டுள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயினின் சர்வதேச மதிப்பு ரூ.105 கோடி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான அரசின் நடவடிக்கை தொடரும் என்றும் இளைஞர்கள் இதுபோன்ற வலையில் சிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு நபர்களுடன் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் புகைப்படத்தையும் முதல்வர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.