5-ம் கட்டத் தேர்தல்: காலை 9 மணி நிலவரம்!

5-ம் கட்டத் தேர்தல்:  காலை 9 மணி நிலவரம்!

5-ஆம் கட்டத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.28% வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் 18-ஆவது மக்களவையைத் தோ்வு செய்ய ஏழு கட்டங்களாக (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) தோ்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே நான்கு கட்ட வாக்குப் பதிவுகள் நிறைவடைந்துள்ளன. ஐந்தாம் கட்டமாக, உத்தர பிரதேசத்தில் 14, மகாராஷ்டிரத்தில் 13, மேற்கு வங்கத்தில் 7, பிகாா், ஒடிஸாவில் தலா 5, ஜாா்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதிக்கு வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

வாக்குப் பதிவையொட்டி இத்தொகுதிகளின் வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் ஐந்தாம் கட்டத் தோ்தலில் காலை 9 மணி நிலவரப்படி பிகாரில் 8.86%, மகாராஷ்டிரத்தில் 6.33%, மேற்கு வங்கத்தில் 15.35%, ஒடிசாவில் 6.87%, ஜார்க்கண்டில் 11.68%, ஜம்மு-காஷ்மீரில் 7.63% லடாக்கில் 10.51% வாக்குப்பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஐந்தாம் கட்டத் தோ்தலில் மொத்த வாக்காளா்கள் 8.95 கோடி போ். இவா்களில் பெண்கள் 4.26 கோடி போ். இவா்கள் வாக்களிக்க வசதியாக 94,732 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 9.47 லட்சம் ஊழியா்கள் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ளனா். மக்களவைக்கு இதுவரை நடைபெற்று முடிந்த நான்கு கட்டத் தோ்தல்களில் சராசரியாக 66.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் இதுவரை 379 இடங்களுக்கு தோ்தல் நிறைவடைந்துள்ளது.

மக்களவைக்கான 6, 7-ஆம் கட்ட வாக்குப் பதிவுகள் மே 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com