5-ம் கட்டத் தேர்தல்: மகனுடன் சென்று வாக்கு செலுத்திய சச்சின் டெண்டுல்கர்

படம்: நன்றி ஏஎன்ஐ நிறுவனம்.
படம்: நன்றி ஏஎன்ஐ நிறுவனம்.

ஐந்தாம் கட்டத் தேர்தலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

சச்சினுடன் அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் தனது வாக்கினை பதிவு செய்தார். ஆனால் சச்சினின் மனைவி அஞ்சலி மற்றும் மகள் சாரா ஆகியோர் வாக்களிக்க வரவில்லை. பட்டமளிப்பு விழா காரணமாக இருவராலும் மும்பைக்கு வர முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சச்சின், ஒன்று, நீங்கள் சிந்திக்காமல் செயல்படுவதால், பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று நான் கூற விரும்புகிறேன், இரண்டு, நீங்கள் சிந்தித்துக் கொண்டே இருக்கிறீர்கள், ஆனால் செயல்படாமல் இருக்கிறீர்கள். மக்களை வாக்களிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

இது நமது தேசத்தின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது என்றார். ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு, உத்தர பிரதேசத்தில் 14, மகாராஷ்டிரத்தில் 13, மேற்கு வங்கத்தில் 7, பிகாா், ஒடிஸாவில் தலா 5, ஜாா்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதிக்கு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com