கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை: நிர்மலா

பிகாருடன் ஒப்பிடும்போது ஒடிசா போன்ற கிழக்கு மாநிலங்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளன.
செய்தியாளர் சந்திப்பில் நிர்மலா சீதாராமன்
செய்தியாளர் சந்திப்பில் நிர்மலா சீதாராமன்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் கிழக்கு மாநிலங்களில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

பிகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்குக்கு பிகார், மேற்கு வங்கம், ஒடிசா போன்ற கிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி எஞ்ஜின்களாக மாற வேண்டும்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

பிகாரில் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான திறமையற்ற ஆட்சி நிர்வாகம் இல்லையென்றால் மாநிலத்தில் தனிநபர் வருவாய் இரு மடங்கிற்கும் மேலாக உயர்ந்திருக்கும்.

பிகாருடன் ஒப்பிடும்போது ஒடிசா போன்ற கிழக்கு மாநிலங்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளன.

செய்தியாளர் சந்திப்பில் நிர்மலா சீதாராமன்
உங்கள் ஆசை.. என் பொறுப்பு.. ராஜீவ் நினைவில் ராகுல் உருக்கம்

1991ஆம் ஆண்டில் பிகாரின் தனிநபர் வருமானம் (ரூ. 21,282) ஒடிசாவின் தனிநபர் வருமானத்தை (ரூ. 20,591) விட அதிகம். ஆனால்,10 ஆண்டுகளில் ஒடிசாவின் தனிநபர் வருமானம் 31% அதிகரித்துள்ளது. இதேகாலகட்டத்தில் பிகாரின் தனிநபர் வருமானம் 32% - 33% சதவிகிதம் குறைந்துள்ளது. 2000ஆம் ஆண்டில் பிகாரின் தனிநபர் வருவாய் ரூ.14,209. பின்னர் ஆண்டுக்கு 5 சதவிகித வளர்ச்சி கண்டு 2019-ல் ரூ. 37,000 ஆனது.

இந்த வளர்ச்சி வலிமையான சட்டம் மற்றும் உத்தரவுகளை பிறப்பித்த நல்லாட்சியின் விளைவாக ஏற்பட்டுள்ளது. (பாஜக கூட்டணியான நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள ஆட்சியை சுட்டிக்காட்டினார் )

பிகரில் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான திறமையற்ற ஆட்சி நிர்வாகம் இல்லையென்றால் மாநிலத்தில் தனிநபர் வருவாய் இரு மடங்கிற்கும் மேலாக உயர்ந்திருக்கும்.

மாநிலத்தில் வளர்ச்சி ஏற்படவில்லை என்றால் தனிநபர் வருமானம் உயராது. பிகார் மாநிலத்தில் முதலீடுகள் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் தொழிற்சாலைகள் இல்லை. இதன் விளைவாக இம்மாநில மக்கள் மற்ற மாநிலங்களில் பணிக்காக புலம்பெயர்ந்து செல்லும் நிலை உள்ளது. பிகார் மாநிலத்திற்கு எந்தவொரு உரிமைத் தொகையையும் கொடுக்காமல் மாநிலத்தின் வளங்கள் மற்ற மாநிலங்களுக்கு செல்லும் வகையிலான திட்டங்களை காங்கிரஸ் உருவாக்கியுள்ளது என்றார் நிர்மலா சீதாராமன்.

பிகார் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளுக்கு கடந்த 2019-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 39 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டுமே வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com