தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை மே 31 வரை நீட்டித்து தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இதே வழக்கில் தில்லி உயர்நீதிமன்றமும் மணீஷ் சிசோடியாவின் காவலை மே 30 வரை நீட்டித்து கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டிருந்தது.
கலால் கொள்கை வழக்கில் தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை(சிபிஐ) கடந்தாண்டு பிப். 26 ஆம் தேதி கைது செய்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையும் தொடர்ந்து சிசோடியாவிடம் விசாரித்து வருகின்றது.
மக்களவைத் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு பிரசாரம் மேற்கொள்வதற்காக சிசோடியா இடைக்கால ஜாமீன் கோரிய மனு விசாரணை நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.