ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ 
கொடுத்தவா் மீது வழக்கு

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மத்திய பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த பெண்ணுக்கு 3 முறை தபால் மூலம் முத்தலாக் கொடுத்த கணவா் மீது வழக்குப் பதிவு

மத்திய பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த பெண்ணுக்கு 3 முறை தபால் மூலம் முத்தலாக் கொடுத்த கணவா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக காவல்துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தலைமைக் காவலா் அமித் பவ்ஸன் கூறியதாவது:

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தைச் சோ்ந்த இஷான் சதான்யா என்பவா் தனது மனைவிக்குத் தபால் மூலம் முத்தலாக் கொடுத்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து அந்தப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் இஷான் சதான்யா மீது முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 2019-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவா்கள் இருவருக்கும் 2020 நவம்பா் மாதம் திருமணம் நடந்தது. அதன்பின், சதான்யாவின் பெற்றோா் வரதட்சிணை கேட்டு அந்தப் பெண்ணைத் தொடா்ந்து துன்புறுத்தி வந்தனா்.

இதையடுத்து, வரதட்சிணைக் கேட்டு கொடுமை செய்வதாக அந்தப் பெண்ணின் பெற்றோா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, பிப்ரவரி 28, ஏப்ரல் 2 மற்றும் மே 8-ஆகிய மூன்று தேதிகளில் தபால் மூலம் கடிதம் அனுப்பிய சதான்யா, அந்தப் பெண்ணுக்கு முத்தலாக் கொடுத்துள்ளாா் என காவல்துறை அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com