லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பிகார்: தேர்தல் வன்முறையில் ஒருவர் சுட்டுக் கொலை

பிகாரில் தேர்தலுக்கு பின் ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

News image
Updated On :21 மே 2024, 10:47 am

DIN

பிகார் மாநிலம் சரணில் நடைப்பெற்ற தேர்தலுக்குப் பின் பாஜக - ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தொண்டர்கள் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர்.

சரண் தொகுதியில் மக்களவைத் தேர்தலின் 5 ஆவது கட்ட வாக்குப் பதிவு திங்கள்கிழமை நடைப்பெற்றது. தற்போதைய பாஜக எம்பி ராஜிவ் பிரதாப் ருடியை எதிர்த்து ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவின் மகள் ரோஹிணி ஆச்சார்யா போட்டியிட்டார்.

சாப்ரா வாக்குச் சாவடி மையத்திற்கு ரோஹிணி ஆச்சார்யா சென்ற போது இருகட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் துப்பாக்கிச்சூடும் நடைபெற்றது.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி கூறுகையில், "துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சாப்ரா மாவட்ட தலைமையகத்தில் உள்ள பிகாரி தாக்கூர் சவுக் அருகே ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட குற்றவியல் நீதிபதி ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மோதலைத் தவிர்க்க மாவட்டம் முழுவதும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.