11 மணி நிலவரப்படி ஒடிசாவில் 21.30% வாக்குகள் பதிவு
11 மணி நிலவரப்படி ஒடிசாவில் 21.30% வாக்குகள் பதிவாகியுள்ளன.


ஒடிசா மக்களவைத் தோ்தலில் 6-ஆம் கட்டமாக 42 சட்டமன்றத் தொகுதிகளில் காலை 11 மணி வரை 21.30 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
சம்பல்பூர், கியோஞ்சார், தேன்கனல், கட்டாக், புவனேஸ்வர், புரி ஆகிய மக்களவைத் தொகுதிகளிலும், இந்த தொகுதிகளுக்கு உள்பட்ட 42 சட்டபேரவைத் தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
ஒடிாசாவின் தலைமைத் தேர்தல் அதிகாரி என்.பி.தால் கூறுகையில், "10,581 வாக்குச் சாவடிகளில் இதுவரை வாக்குப்பதிவு அமைதியாக நடந்துள்ளது. காலை 11 மணி வரை, மொத்தமுள்ள 94.48 லட்சம் வாக்காளர்களில் 21.30% பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
தேன்கனல் மக்களவைத் தொகுதியில் 22.41%, சம்பல்பூரில் 21.89%, பூரி (21.51%), கியோஞ்சர் (20.89%), புவனேஸ்வர் (20.72%), கட்டாக்கில் (20.47%) வாக்குகளும் பதிவாகியுள்ளன.
உண்மையான வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு நடைபெற்ற போலி வாக்குப்பதிவின் போது இவிஎம் எந்திரத்தில் குறைபாடு ஏற்பட்டதால், 116 பேலட் யூனிட்கள், 125 கட்டுப்பாட்டு யூனிட்கள், 256 விவிபேட் எந்திரங்களை மாற்றியுள்ளோம்” என்றார்.
நாயக்கர் சட்டமன்றப் பகுதியின் பாபூர் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வயதான பெண் வாக்காளர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இறந்தார். அதே நேரத்தில் தேன்கனல் மக்களவைத் தொகுதியின் ஹிண்டோல் சட்டமன்றப் பிரிவுக்கு உட்பட்ட ஒரு வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடி முகவர் இறந்ததாக அதிகாரி தெரிவித்துள்ளனர்.
121 கம்பெனி மத்தியப் பாதுகாப்பு படைகள் உள்பட 35,000 பாதுகாப்புப் பணியாளர்கள் வெவ்வேறு வாக்குச் சாவடிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தலைமைச் செயலாளர் பி.கே.ஜெனா, பாஜக தேசிய துணைத் தலைவர் பைஜயந்த் பாண்டா உள்ளிட்ட பல மூத்த தலைவர்களும் புவனேஸ்வரின் வெவ்வேறு வாக்குச் சாவடிகளில் வாக்களித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...