3 மணி நிலவரப்படி 49.2% வாக்குகள் பதிவு!
மக்களவைத் தேர்தலுக்கான ஆறாம் கட்ட வாக்குப்பதிவில் 3 மணி நிலவரப்படி 49.2% வாக்குகள் பதிவாகியுள்ளன.


மக்களவைத் தேர்தலுக்கான ஆறாம் கட்ட வாக்குப்பதிவு 58 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவில் பிற்பகல் 3 மணி வரை சராசரியாக 49.2% சதவீத வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் ஆணையம் சனிக்கிழமை தெரிவித்தது.
பிகாரில் 8 இடங்களும், ஹரியாணாவில் 10 இடங்களும், ஜம்மு காஷ்மீரில் ஒரு இடமும், ஜார்க்கண்டில் 4 இடங்களும், தில்லியில் 7 இடங்களும், ஒடிாசாவில் 6 இடங்களும், உத்தரப் பிரதேசத்தில் 14 இடங்களும், மேற்கு வங்கத்தில் 8 இடங்களிலும் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, 6 ஆவது கட்ட தேர்தலில் 3 மணி நிலவரப்படி 49.2% வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் பிற்பகல் 3 மணி வரை 70.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
பிகார் - 45.21%
ஹரியாணா - 46.26%
ஜம்மு-காஷ்மீர் - 44.41%
ஜார்க்கண்ட்- 54.34%
தில்லி - 44.58%
ஒடிஸா - 48.44%
உத்தரப் பிரதேசம் - 43.95%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...