
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சாந்தினி சௌக் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் மனைவி சுனிதா கேஜரிவால் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
மக்களவைத் தோ்தலில் 6-ஆம் கட்டமாக உத்தரப்பிரதேசத்தில் 14, ஹரியாணாவில் 10, பிகாா், மேற்கு வங்கத்தில் தலா 8, தில்லியில் 7, ஒடிஸாவில் 6, ஜாா்க்கண்டில் 4, ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதிக்கு வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவுக்குப் பின்னர் முதல்வர் கேஜரிவால் செய்தியாளர்களுடன் பேசினார். சர்வாதிகாரம், விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மைக்கு எதிராக மக்கள் அதிகளவில் வாக்களிப்பதாக அவர் கூறினார்.
கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று, நடைபெற்று வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் வாக்களிக்க வேண்டும் என்று அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
தில்லி கலால் கொள்ளை வழக்கில் கேஜரிவால் ஜூன் 1-ம் தேதி வரை இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.