
உனா: சுற்றுலாவைக் கழிக்க ராகுல் பாபாவும் அவரது சகோதரியும் ஷிம்லாவுக்கு வந்தார்கள். ஆனால் அயோத்தியில் நடைபெற்ற பிராண பிரதிஷ்டைக்கு வரவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
ஹிமாசலப் பிரதேசம் உனாவில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமித் ஷா, நாட்டுக்காக கடந்த 23 ஆண்டுகளாக ஓய்வே எடுக்காமல் உழைத்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி என்று கூறினார்.
ஆனால், ராகுல் பாபாவும் அவரது சகோதரியும் விடுமுறைக்காக ஷிம்லா வந்தார்கள். ஆனால் அயோத்தியில் நடந்த பிராண பிரதிஷ்டைக்குச் செல்லவில்லை. அவர்கள் போக மாட்டார்கள், ஏனென்றால் அவர்களது வாக்கு வங்கிக்காக பயப்படுகிறார்கள். ஒரு பக்கம் ஆறு மாதத்துக்கு ஒரு முறை தனது விடுமுறையைக் கொண்டாடும் ராகுல் பாபா இருக்கிறார், மற்றொரு பக்கம் கடந்த 23 ஆண்டுகளாக விடுமுறையே எடுக்காமல், தீபாவளி அன்று கூட, நாட்டின் எல்லைப் பகுதிக்குச் சென்று இந்திய வீரர்களுக்கு இனிப்பு வழங்கும் நமது பிரதமர் மோடி இருக்கிறார்.
நாம் நிச்சயம் 400ல் வெற்றி பெறுவோம், அதுபோல ராகுல் பாபா மீண்டும் 40க்கும் கீழே விழுவார் என்றும் இந்தியா கூட்டணிக்கு பிரதமர் முகம் என்று யாரும் கிடையாது என்றும் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.