
பிகாரில் தனது தேர்தல் பிரசாரத்துக்காக அமைக்கப்பட்ட மேடையின் ஒரு பகுதி சரிந்தபோது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பியுள்ளார்.
பிகாரின் தலைநகர் பாட்னா புறநகர்ப் பகுதியில் உள்ள பாலிகஞ்ச் என்ற இடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பாடலிபுத்திரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதியை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வதற்காக வந்திருந்தார்.
இந்நிலையில், பிரசாரத்தின் போது ராகுல் காந்தி பேசிக் கொண்டிருந்த மேடையின் ஒரு பகுதி தொய்வடைந்து சரிந்ததை கண்ட மிசா பாரதி, ராகுல் காந்தியின் கையைப் பிடித்துக் கொண்டு, மேடையில் இருந்து கீழே அழைத்துச் சென்றார்.
சுதாரித்துக் கொண்ட ராகுல் காந்தியும், பொதுமக்களுக்கு கையசைத்த படியே மேடையில் இருந்து கீழே இறங்கினார்.
மேலும், அங்கு உதவி செய்ய ஓடி வந்த பாதுகாப்புப் பணியாளர்களிடம், காங்கிரஸ் தலைவர் பத்திரமாக இருப்பதாக மிசா பாரதி புன்னகையுடன் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.