அஸ்ஸாமின் முதல் செய்யறிவு(ஏஐ) ஆசிரியர் 'ஐரிஸ்', பாரம்பரிய உடையான 'மெகேலா சாடோர்', நகைகள் அணிந்து தனியார் பள்ளி மாணவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் உடனடியாக பதிலளித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹீமோகுளோபின் என்றால் என்ன? என்று மாணவர்கள் கேட்ட கேள்விக்கு மனித உருவ ரோபோ 'ஐரிஸ்' விரிவாக பதிலளித்தது.
இதுகுறித்து ராயல் குளோபல் பள்ளி ஆசிரியர் கூறுகையில், கேள்விகள் மாணவர்களின் பாடத்திட்டத்திலோ அல்லது அது எதைப் பற்றியதாக இருந்தாலும், 'ஐரிஸ்' எந்த நேரத்திலும் எடுத்துக்காட்டு குறிப்புகளுடன் பதில்களை வழங்குகிறது. ரோபோ ஆசிரியரின் பல்வேறு செயல்பாடுகளை கண்டு மாணவர்கள் அனைவரும் வியப்புடன் கண்டுகளித்தனர்.
Its Remarkable!
— Pijush Hazarika (Modi ka Parivar) (@Pijush_hazarika) May 27, 2024
With the introduction of AI teacher, the education scenario will get upgraded & enhanced to a great extent. pic.twitter.com/Zm6HDwxWuE
கைகுலுக்கல் போன்ற சைகைகளை செய்யும் ரோபோவின் திறனை குழந்தைகள் ரசிக்கின்றனர். இது கற்றல் செயல்முறையை வேடிக்கையாகவும், மாணவர்களை ஈடுபாட்டுடனும் செயல்படவைக்கிறது.
'ஐரிஸ்' குரல் கட்டுப்படுத்தப்பட்ட கருவியை கொண்டுள்ளதால், மாணவர்களின் கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்க உதவுகிறது. செய்யறிவு(ஏஐ) ஆசிரியரிடம் அவர்களின் கேள்விகளுக்கான பதில்கள் இருப்பதால் குழந்தைகள் மிகவும் உற்சாகமாக உள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் உள்ள கல்வி செயல்பாடுகளுக்கு செய்யறிவை(ஏஐ) ஒருங்கிணைப்பதில் 'ஐரிஸ்' குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் அளிக்கிறது. 'ஐரிஸ்' அறிமுகமானது கற்றல் அனுபவத்தை மேம்படுத்துவதிலும், மாணவர்களின் மாறுபட்ட கற்றல் பாணிகளை வழங்குவதிலும் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்'' என்றார்.
நிதிஆயோக்கால் தொடங்கப்பட்ட அடல் டிங்கரிங் லேப் திட்டத்தின்கீழ் மேக்கர்லேப்ஸ் எடுடெக் நிறுவனத்துடன் இணைந்து இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குறைவான கட்டணம்... தரமான கல்வி!

இலவசமாக 25,000 பேருக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி! அரசுப் பள்ளி ஆசிரியரின் தவப்பணி!

நீட்டிப்புதான் ஒரே தீர்வு!
பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்




