

ரீமெல் புயலுக்குப் பிறகு இடைவிடாது பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து மணிப்பூரில் 1.8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் இதுவரை கிடைத்த தகவலின்படி, சுமார் 1.8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 24,265 வரையிலான வீடுகள் சேதமடைந்துள்ளன என்றும், 18 ஆயிரம் பேர் வெள்ள அபாயப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும், சுமார் 401 ஹெக்டேர் பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. 18 இடங்களில் ஆற்றின் கரைகள் உடைக்கப்பட்டன என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.
மணிப்பூர் வெள்ள நிகழ்வினை அறிந்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, காங்கிரஸ் தொண்டர்களையும் தலைவர்களையும் மணிப்பூர் மக்களுக்கு உதவிகள் வழங்குமாறு கேட்டு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.