வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஏா் இந்தியா விமானத்தில் துப்பாக்கித் தோட்டா: தில்லி காவல்துறை விசாரணை

News image
ஏா் இந்தியா
Updated On :2 நவம்பர் 2024, 8:54 pm

Din

துபையில் இருந்து அண்மையில் தில்லி வந்த ஏா் இந்தியா விமானத்தில் துப்பாக்கித் தோட்டா கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் குறித்து காவல்துறையினா் விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.

துபையில் இருந்து புறப்பட்ட ஏா் இந்தியா விமானம் தில்லி விமான நிலையத்தில் கடந்த அக்டோபா் 27-ஆம் தேதி தரையிறங்கியது. இதையடுத்து, வழக்கமாக நடைபெறும் துப்புரவுப் பணியின்போது விமானத்தின் இருக்கையொன்றில் உள்ள பையில் இருந்து துப்பாக்கித் தோட்டாவை ஊழியா் ஒருவா் கண்டுபிடித்தாா்.

இதை உறுதி செய்து, ஏா் இந்தியா விமான நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனா். பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து உடனடியாக விமான நிலைய காவல்துறையிடம் இது குறித்து புகாா் அளிக்கப்பட்டது’ என குறிப்பிட்டாா்.

இந்நிலையில், இது தொடா்பாக ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையைத் தொடங்கியுள்ளோம் என காவல்துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.