மகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய தந்தைக்கு 10 ஆண்டு சிறை!

4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவு
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் பெண் ஒருவர் 2017 ஆம் ஆண்டில் திருமணமான நிலையில், மாமியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு காரணத்தால், தான் பிறந்த வீட்டிற்கே கணவருடன் திரும்பியுள்ளார். பெண்ணின் தாயார் இறந்த நிலையில், அவரது தந்தை மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், வீட்டுக்கு வந்த மகளை 2021 ஆம் ஆண்டு வரையில், அவரது கணவர் இல்லாத நேரத்தில் 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலம் பெண்ணின் தந்தை மீது புகார் அளிக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு வியாழக்கிழமையில் (நவ. 7) வந்ததையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டதுடன், ரூ. 60,000 அபராதமும் விதித்து கூடுதல் அமர்வுகள் நீதிபதி ஃபரிதாபாத் ஹேம்ராஜ் மிட்டல் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com