
திருவனந்தபுரம்: வாட்ஸ்அப்-இல் ‘ஹிந்து அதிகாரிகள்’ என்ற பெயரில் குழு உருவாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கேரளத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒழுக்க விதிகளை மீறி செயல்பட்டதாக ஐஏஎஸ் அதிகாரிகள் மீது கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
வாட்ஸ்அப்-இல் மத ரீதியான குழுக்கள் உருவாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் தொழில்துறை இயக்குநராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி கே. கோபாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தனது ஸ்மார்ட்ஃபோனிலிருந்து ‘மல்லு ஹிந்து அதிகாரிகள்’ என்ற பெயரில் ஒரு வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கடந்த சில நாள்களுக்கு முன் புகாரளித்திருந்தார்.
ஆனால் அவரது ஸ்மார்ட்ஃபோன் ஹேக் செய்யப்படவில்லை என்பதும், வேரு யாரும் அத்னை இயக்கவில்லை என்பதும் இணையவழிக் குற்றச்செயல் தடுப்பு பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதையடுத்து அவரது குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பது நிரூபனமாகியுள்ளது. இந்த நிலையில், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, மூத்த அதிகாரிகளை சமூக வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சித்த குற்றச்சாட்டில் வேளாண் துறை சிறப்பு செயலர் என். பிரஷாந்த் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.