
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு வயநாட்டு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் வைத்துள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இதையடுத்து ரேபரேலி தொகுதி உறுப்பினர் பதவியை தக்க வைத்துக் கொண்டு, வயநாடு உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்.
இதனால், வயநாடு மக்களவைத் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் தனது சகோதரிக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, வாக்குப்பதிவு நாளான இன்று மக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
இதையும் படிக்க : ஜனநாயக திருவிழாவில் முழு ஆர்வத்துடன் வாக்களியுங்கள்: பிரதமர் மோடி!
ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“வயநாட்டில் உள்ள எனது குடும்பத்தினருக்கு வேண்டுகோள் வைக்கிறேன். இந்தத் தேர்தல் மூலம் நாடாளுமன்றத்தில் உங்கள் குரலாக ஒலிக்க எனது சகோதரி பிரியங்கா காந்தி தயாராக இருக்கிறார்.
அவர் ஒரு பிரதிநிதி என்பதை தாண்டி, உங்கள் சகோதரியாகவும், உங்கள் மகளாகவும், உங்கள் வழக்கறிஞராகவும் இருப்பார். வயநாட்டுக்காக முழுத் திறனையும் வெளிப்படுத்துவார் என்று நான் நம்புகிறேன்.
அனைவரையும் வீட்டை விட்டு வெளியே வந்து வாக்களித்து அவருக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒன்றிணைந்து மகத்தான வெற்றியை உறுதி செய்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








