ஜோ பைடனை விமர்சித்த ராகுல் மன்னிப்பு கோர வேண்டும்! தேசிய மருத்துவர் அமைப்பு!

`ஜோ பைடனைப் போல பிரதமர் மோடிக்கும் நினைவாற்றல் இல்லை’ என்று ராகுல் விமர்சித்திருந்தார்.
ஜோ பைடனை விமர்சித்த ராகுல் மன்னிப்பு கோர வேண்டும்! தேசிய மருத்துவர் அமைப்பு!
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நினைவாற்றல் அற்றவர் என்று விமர்சித்ததற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேசிய மருத்துவர் அமைப்பு கோரியுள்ளது.

மகாராஷ்டிரத்தின் அமராவதியில் நவ. 16 ஆம் தேதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ``அமெரிக்க அதிபர் ஜோ பைடனைப் போலவே பிரதமர் மோடியும் நினைவாற்றல் இழப்பை அனுபவித்து வருவதாகத் தெரிகிறது’’ என்று கூறியிருந்தார். இந்த நிலையில், ராகுலின் இந்த விமர்சனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது தாயாரும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்திக்கு தேசிய மருத்துவர் அமைப்பு பாரத் (National Medicos Organisation Bharat) கடிதம் எழுதியுள்ளது.

கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது, ``ஒரு பொது மேடையில் தலைவர்கள் குறித்த இதுபோன்ற அறிக்கைகளோ விமர்சனங்களோ, தவறான தகவல்களை நிலைநிறுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. இது சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் புரிதல், சிகிச்சை மீதான எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும்.

அமெரிக்க அதிபர் பைடனின் அறிவாற்றல் திறன்களை இழிவுபடுத்துவதுபோல் வெளிப்பட்ட ராகுல் காந்தியின் கருத்துக்கள் கவலையை அளிக்கிறது.

தன்னை விட மூத்தவர் மற்றும் வயதான அரசியல் தலைவர் குறித்து ராகுல் இவ்வாறான கருத்துகளைத் தெரிவிப்பது என்பது இந்திய கலாசாரத்தைப் பாதிப்பதாக உள்ளது. இதுபோன்ற கருத்துக்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கான தகுதியற்ற தன்மையைக் குறிக்கின்றன.

இது தனிநபர் மீதான தனிப்பட்ட அவமரியாதை மட்டுமல்ல; இந்தியாவில் சுகாதாரச் சவால்களை எதிர்த்து வாழும் எண்ணற்ற மூத்த குடிமக்கள் மீதான அவமரியாதை.

உங்கள் மீதும் கூட இதுபோன்று உடல்நிலை குறித்த வதந்திகள் சில சமயங்களில் வந்திருக்கும். ஒரு தனிநபர் மீது இவ்வாறான கருத்துகள் சமூகத்தில் எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஆகவே, தனது கருத்துகளைப் பற்றி ராகுல் சிந்திக்க வேண்டும்; மேலும், அவர் பகிரங்க மன்னிப்பும் கோர வேண்டும். எதிர்காலத்திலும் இதுபோன்ற கருத்துகள் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com