

கர்நாடக மாநிலத்தின் பேரவை இடைத்தேர்தலில் முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது. 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.
ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிர பேரவைத் தேர்தலுடன் சேர்த்து, உத்தரப் பிரதேசம், அசாம், பிகார், குஜராத், கர்நாடகம், கேரளம், மத்தியப் பிரதேசம், மேகாலயா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், மேற்கு வங்கம், உத்தரகண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத் தேர்தல் நடைபெற்றது.
இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், 11.30 மணிக்கான முன்னிலை நிலவரங்களைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க: முதல் தேர்தலிலேயே இமாலய வெற்றியை நோக்கி பிரியங்கா!
அதன்படி, கர்நாடகத்தில் ஷிக்ககான் தொகுதியில் காங்கிரஸின் பதான் யஷிர் அகமத்கான் 49,177 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாஜக 48822 வாக்குகளுடன் பின்னடைவு சந்தித்துள்ளது. 355 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.
அதேவேளையில் ராஷ்டிர சமிதி சார்பில் போட்டியிட்ட ரவி கிருஷ்ண ரெட்டி 1166 வாக்குகளும், சோசியலிஸ்ட் கட்சி வெறும் 363 வாக்குகளுடன் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.
சந்தூர் தொகுதியிலும் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. அன்னாபூர்ணா 78,277 வாக்குகளும், பாஜகவின் பங்காரூ ஹனுமந்த 70,038 வாக்குகளும் பெற்றுள்ளனர். காங்கிரஸ் 8239 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை விட முன்னிலையில் உள்ளது.
சன்னபட்னாவில் காங்கிரஸின் சி.பி.யோகேஸ்வரா 73143 வாக்குகளுடன் முன்னிலையிலும், ஜனதா தளம் சார்பில் போட்டியிடும் நிகிலி குமாரசாமி 51080 வாக்குகளும் பெற்றுள்ளனர். மொத்தம் 22063 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சட்டப் பேரவை இடைத்தோ்தலை எதிா்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது

கர்நாடகத்தில் சாத்தியமாகுமா "தலித்' முதல்வர் கனவு?

ஒடிஸா: 4 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் அறிவிக்கை வெளியீடு

வள்ளியூா் வியாபாரிகள் சங்க தோ்தல்
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

