மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

ஜார்க்கண்ட்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

இரு கட்டங்களாக 81 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு இன்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :23 நவம்பர் 2024, 2:51 am

ஜார்க்கண்டில் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக கடந்த நவம்பா் 13, 20 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 2.60 கோடி வாக்காளா்களைக் கொண்ட இம்மாநிலத்தில் இரு கட்டங்களையும் சோ்த்து 67.74 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில், சனிக்கிழமை (நவ. 23) தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் இன்றே அறிவிக்கப்படவுள்ளது.

மாநிலத்தில் ஆளும் ‘இண்டி’ கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 43, காங்கிரஸ் 30, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 6, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) 4 இடங்களில் போட்டியிட்டன. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 68, அனைத்து ஜார்க்கண்ட் மாணவா் சங்கம் 10, ஐக்கிய ஜனதா தளம் 2, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) ஓரிடத்தில் களம் கண்டன. இந்தத் தேர்தலில் மொத்தம் 1,211 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

மகாராஷ்டிரத்திலும் நடத்தப்பட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் இன்றே அறிவிக்கப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.