தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மகாராஷ்டிரத்தில் வெற்றியை நோக்கி மகாயுதி: ஏற்க முடியாது - சஞ்சய் ரௌத்

மகாராஷ்டிரத்தில் வெற்றியை நோக்கி மகாயுதி சென்றுகொண்டிருக்கும் நிலையில், இதனை மக்களின் தீர்ப்பு என சொல்ல முடியாது

News image
சஞ்சய் ரௌத் - கோப்பிலிருந்து
Updated On :23 நவம்பர் 2024, 7:06 am

DIN

மகாராஷ்டிரத்தில் ஆளும் மகாயுதி கூட்டணி வெற்றியை உறுதி செய்திருக்கும் நிலையில், இதனை மக்களின் தீர்ப்பு என ஏற்றுக்கொள்ள முடியாது என்று சிவசேனை (உத்தவ்) தலைவர் சஞ்சய் ரௌத் கூறியிருக்கிறார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் முடிவில் சந்தேகம் உள்ளது என்றும் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ரௌத் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த தேர்தல் முடிவு, மக்களின் தீர்ப்பு என்று எங்கள் கட்சி ஏற்காது என்றும், இந்த தேர்தல் முடிவில் சந்தேகம் இருப்பதாகவும், அவ்வளவு ஏன், இந்த தேர்தல் முடிவை எவ்வாறு ஏற்றுக்கொள்ளவது என மக்களே சிந்தித்துக்கொண்டிருப்பார்கள் என்றும் குறிப்பிட்டிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில், பணம் செல்வாக்குப் படைத்திருக்கிறது. ஏக்நாத் ஷிண்டேவின் அனைத்து எம்எல்ஏக்களும் எப்படி வெற்றி பெற முடியும்? மகாராஷ்டிர மக்களின் கோபத்துக்கு ஆளான அஜித் பவார் எப்படி வெற்றி பெற முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்த பேச்சுக்கு, பாஜக தலைவர் பிரவீன் தாரேகர் பதில் அளித்துள்ளார். சஞ்சய் ரௌத் தனது விமானத்தை தரையில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. மாநிலத்திலும், மத்தியிலும் பாஜக ஆட்சி அமைந்தால், மாநிலம் நல்ல வளர்ச்சியை அடையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.