/

திருமண நிகழ்வுக்குச் சென்றுவிட்டுத் திரும்பியபோது நிகழ்ந்த சோகம்: 5 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த சாலை விபத்து பற்றி..

News image
உ.பி.யில் சாலை விபத்து
Updated On :25 நவம்பர் 2024, 6:23 am

DIN

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் இன்று அதிகாலை நடந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து மல்லவான் காவல்நிலையத்திற்குள்பட்ட பகுதியில் அதிகாலை 3 மணியளவில் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய கார் சாலை சந்திப்பில் நின்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது மோதியது. பேருந்தில் திருமண விழாவைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். இந்த விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது.

தகவல் கிடைத்ததும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 4 பேர் உடனடியாக சிகிச்சைக்காக லக்னௌவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பேருந்திலிருந்த அனைத்து பயணிகளுக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டதாகக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த துயர சம்பவத்திற்கு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு முறையான மருத்துவச் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.