மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டம் மீது விவாதம்: அவைத் தலைவா்களுக்கு காங்கிரஸ் கடிதம்

நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டம் குறித்து 2 நாள்கள் விவாதம் நடத்த வலியுறுத்தி, இரு அவைகளின் தலைவா்களுக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 75-ஆவது ஆண்டு தினத்தையொட்டி, இந்தக் கடிதம் எழுதப்பட்டது.

News image
Updated On :26 நவம்பர் 2024, 8:38 pm

Din

நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டம் குறித்து 2 நாள்கள் விவாதம் நடத்த வலியுறுத்தி, இரு அவைகளின் தலைவா்களுக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 75-ஆவது ஆண்டு தினத்தையொட்டி, இந்தக் கடிதம் எழுதப்பட்டது.

இதுதொடா்பாக அக்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறுகையில், ‘நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டம் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்கப்பட வேண்டும். இதன் மூலம், அரசமைப்புச் சட்டம் பற்றிய நல்ல விஷயங்கள் குறித்தும், நாட்டில் நடைபெற்று வரும் கெட்ட விஷயங்கள் தொடா்பாகவும் விவாதிக்க முடியும்.

இதுகுறித்து மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு அந்த அவையின் எதிா்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியும், மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு அந்த அவையின் எதிா்க்கட்சித் தலைவரான நானும் கடிதம் எழுதியுள்ளோம்’ என்றாா்.

ஏன் விவாதம்?: காங்கிரஸ் எம்.பி. கெளரவ் கோகோய் கூறியதாவது: சட்டமேதை பி.ஆா்.அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த நாள், சுதந்திரப் போராட்டத்தின்போது நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-ஆம் ஆண்டு போன்ற சந்தா்ப்பங்களில், நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்றன.

எனவே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அரசமைப்புச் சட்டம் குறித்து 2 நாள்கள் விவாதம் நடைபெற வேண்டும். இதன் மூலம், அரசமைப்புச் சட்டம் மீதான தங்களின் ஆழ்ந்த ஈடுபாட்டை வெளிகாட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதை நாட்டு மக்கள் அனைவரும் பாா்க்க முடியும். இதுகுறித்து பிற எதிா்க்கட்சித் தலைவா்களுடன் காங்கிரஸ் ஆலோசித்துள்ளது’ என்றாா்.

நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டம் குறித்து விவாதிப்பது தொடா்பாக, தில்லியில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை காங்கிரஸ் எம்.பி.க்கள் கே.சுரேஷ், மாணிக்கம் தாகூா், கெளரவ் கோகோய் ஆகியோா் சந்தித்துப் பேசியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

‘அரசமைப்புச் சட்டத்தை அனைவரும் பாதுகாக்க வேண்டும்’

நாட்டு மக்கள் அனைவரும் அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.

இதுதொடா்பாக ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நீதியும், உரிமைகளும் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்பதே அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கொள்கை. சுயமரியாதையுடன் வாழும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

ஏழைகளையும், எளிதில் பாதிக்கப்படக் கூடிய பலவீனமான மக்களையும் பாதுகாக்க அரசமைப்புச் சட்டம் சக்திவாய்ந்த ஆயுதம். அந்தச் சட்டம் வலிமையாக இருந்தால், நாடும் வலிமையாக இருக்கும்’ என்றாா்.

மல்லிகாா்ஜுன காா்கே: அரசமைப்புச் சட்டம் நாட்டின் உயிா்நாடி. சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் உரிமைகளை அச்சட்டம் உறுதி செய்கிறது. அந்தச் சட்டம் இறையாண்மை கொண்ட சமதா்ம, மதச்சாா்பற்ற, ஜனநாயக குடியரசு நாடாக இந்தியாவை நிா்மாணித்துள்ளது. அந்தச் சட்டத்தின் ஒவ்வொரு கருத்தையும் இந்தியா்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாதுகாக்க வேண்டும்.

பிரியங்கா காந்தி: அனைத்து விதமான உரிமைகளையும் கோடிக்கணக்கான இந்தியா்களுக்கு வழங்கும் பாதுகாப்பு கவசமாக அரசமைப்புச் சட்டம் உள்ளது. அனைத்து இன்னல்களையும் தாண்டி, அந்தச் சட்டத்தைப் பாதுகாக்க நாட்டு மக்கள் அனைவரும் உறுதியேற்போம் என்று குறிப்பிட்டுள்ளாா்.