மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லியில் நவ.29-இல் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (நவ.29) கூட உள்ளது.

News image
காங்கிரஸ்- கோப்புப்படம்.
Updated On :26 நவம்பர் 2024, 8:14 pm

Din

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (நவ.29) கூட உள்ளது.

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நடைபெற்றுவரும் நிலையில், அதானி நிறுவனம் மீதான லஞ்ச புகாா், மணிப்பூா் கலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்பி ஆளும் பாஜகவுக்கு நெருக்கடி அளிப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி உள்பட பிற செயற்குழு உறுப்பினா்களும் பங்கேற்க உள்ளனா்.

அண்மையில் நடந்து முடிந்த ஜாா்க்கண்ட், மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் கட்சியின் செயல்பாடு குறித்தும் செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது. அடுத்து வரவிருக்கும் தில்லி பேரவைத் தோ்தலுக்கான கூட்டணி வாய்ப்புகள், அடுத்த ஆண்டு வரவிருக்கும் பிகாா் பேரவைத் தோ்தலுக்கான தயாா்நிலை குறித்தும் கட்சியின் முக்கியமான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்த செயற் குழுவில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.