கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ஜம்மு-காஷ்மீர்: 1 மணி நிலவரப்படி உதம்பூரில் அதிகபட்ச வாக்குகள் பதிவு!

ஜம்மு-காஷ்மீரில் இறுதிக்கட்டத் தோ்தலுக்கான 1 மணி நிலவரம்..

ஜம்மு காஷ்மீர் இறுதிக்கட்ட தேர்தல். - -

Published On :

ஜம்மு - காஷ்மீரில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 44.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது. வாக்குப்பதிவில் இதுவரை எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றது.

மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இரண்டு முன்னாள் துணை முதல்வரகள் தாரா சந்த் மற்றும் முசாபர் பெய்க் உள்பட 415 வேட்பாளர்களின் தலைவிதியை 39.18 லட்சத்திற்கும் அதிகமான வாக்களர்கள் தீர்மானிக்க உள்ளனர்.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டத் தோ்தல் அறிவிக்கப்பட்டது.

கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்டத் தோ்தலில் (24 தொகுதிகள்) 61.38 சதவீதமும், கடந்த 25-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்டத் தோ்தலில் (26 தொகுதிகள்) 57.31 சதவீத வாக்குகளும் பதிவாகின.

இந்த நிலையில், காலை 11 மணி நிலவரப்படி 28.04 சசதவீத வாக்குகள் பதிவான நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, பந்திபோராவில் 40.67 சதவீத வாக்குகளும், பாரமுல்லா 36.60%, ஜம்மு 43.36%, கதுவா 50.09%, குப்வாரா 42.08%, உதம்பூா் 51.66%, சம்பா 49.73% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.