சாலையை வழிமறித்த 15 அடி மலைப்பாம்பு!

ஒரு மணி நேரமாக சாலையில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பால் பரபரப்பு.
python
15 அடி மலைப்பாம்புDin
Updated on
1 min read

வேலூர்: பேரணாம்பட்டு அருகே 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று, சாலையை மறித்து ஒரு மணி நேரமாக ஊர்ந்து சென்றது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியை ஒட்டிய பத்தலபள்ளி வி. கோட்டா சாலையில் ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கும், அண்டை மாநிலங்களுக்கும் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனம், சரக்குவாகனம், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.

இந்நிலையில், சுமார் 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று சாலையை மறித்து சுமார் ஒரு மணி நேரமாக ஊர்ந்து அருகில் உள்ள புதர் பகுதிக்கு ஊர்ந்து சென்றது.

வி.கோட்டா சாலையில் திடீரென வந்த மலைப்பாம்பைக் கண்டு அச்சமடைந்த வாகன ஒட்டிகள், மலைப்பாம்பு செல்லும் வரை காத்திருந்து பின்னர் சென்றனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com