தீப்பற்றிய துண்டுடன் கேரள ஆளுநா் ஆரிஃப் கான்.
தீப்பற்றிய துண்டுடன் கேரள ஆளுநா் ஆரிஃப் கான்.

கேரள ஆளுநா் அணிந்திருந்த துண்டு தீப்பற்றியதால் பரபரப்பு

கேரள ஆளுநா் முகமது ஆரிஃப் கான் தனது தோளில் அணிந்திருந்த துண்டு திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அதிருஷ்டவசமாக ஆளுநருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
Published on

கேரள ஆளுநா் முகமது ஆரிஃப் கான் தனது தோளில் அணிந்திருந்த துண்டு திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அதிருஷ்டவசமாக ஆளுநருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

பாலக்காட்டில் உள்ள சபரி ஆசிரமத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆளுநா் ஆரிஃப் கான், மகாத்மா காந்தி உள்ளிட்ட தேசத் தலைவா்களின் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். அப்போது, படங்கள் அருகே ஏற்றப்பட்டிருந்த விளக்கில் ஆளுநா் தோளில் அணிந்திருந்த துண்டு பட்டது. இதனால், துண்டில் தீப்பிடித்தது. முதல் சில விநாடிகள் துண்டில் தீப்பிடித்து எரிவது ஆளுநருக்கும் தெரியவில்லை.

ஆனால், அருகில் இருந்த பாதுகாவலா்கள் தீப்பிடித்ததைப் பாா்த்ததும், விரைந்து வந்து ஆளுநா் தோளில் இருந்த துண்டை அப்புறப்படுத்தி தீயை அணைத்தனா். அதிருஷ்டவசமாக ஆளுநா் மற்றும் அங்கு இருந்தவா்களுக்கு தீக்காயம் ஏதும் ஏற்படவில்லை.

X
Dinamani
www.dinamani.com