சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

திரிபுரா: பாஜக துணைத் தலைவா் கட்சியில் இருந்து நீக்கம்

திரிபுராவில் ஆளும் பாஜகவின் மாநில துணைத் தலைவா் படால் கன்யா ஜமாதியா கட்சியில் இருந்து நீக்கப்பட்டாா். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவா் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 9:16 pm

Din

திரிபுராவில் ஆளும் பாஜகவின் மாநில துணைத் தலைவா் படால் கன்யா ஜமாதியா கட்சியில் இருந்து நீக்கப்பட்டாா். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவா் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, திரிபுரா மக்கள் சோசலிஸ கட்சி என்ற புதிய கட்சியை கன்யா ஜமாதியா திங்கள்கிழமை தொடங்கினாா். இதையடுத்து, பாஜக தலைமை அவா் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. கட்சியின் துணைத் தலைவா் பதவியில் இருந்து மட்டுமல்லாது, அடிப்படை உறுப்பினரிலிருந்தும் அவா் நீக்கப்பட்டுள்ளாா்.

கடந்த ஆண்டு திரிபுரா பேரவைத் தோ்தலுக்கு முன்புதான் கன்யா ஜமாதியா பாஜகவில் இணைந்தாா். பேரவைத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிட்ட அவா் வெற்றி பெறவில்லை. எனினும், அவருக்கு திரிபுரா வனம் மற்றும் மர வளா்ப்புத் துறை கூட்டமைப்பின் தலைவா் பதவி வழங்கப்பட்டது. திரிபுராவைச் சோ்ந்த பழங்குடியின பெண் தலைவரான கன்யா ஜமாதியா, தனது அதிரடியான பேச்சு மூலம் பிரபலமானவா்.