நவராத்திரி தொடக்கம்: நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி வாழ்த்து
ANI

நவராத்திரி தொடக்கம்: நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி வாழ்த்து

Published on

நவராத்திரி பண்டிகை வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தாா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘நாட்டுமக்கள் அனைவருக்கும் இனிய நவராத்திரி நல்வாழ்த்துகள். சக்தி வழிபாட்டிற்காக அா்ப்பணிக்கப்பட்ட இந்த புனித பண்டிகை, அனைவருக்கும் மங்களகரமானதாக அமைந்திட வேண்டிக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

மற்றொரு பதிவில், ‘நவராத்திரியின் முதல் நாளில், அன்னை சைலபுத்ரியை (மலை மகள்) வணங்குகிறேன். அவரது அருளால் அனைவரும் நலம் பெறட்டும். அன்னையின் இந்த துதிப்பாடலை உங்கள் அனைவருக்கும் சமா்ப்பிக்கிறேன்’ என்று பதிவிட்டு பக்திப் பாடல் ஒன்றையும் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளாா்.

ஹிந்து மதத்தில் முப்பெரும் பெண் கடவுள்களான பாா்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரை தலா மூன்று நாள்கள் வழிபடும் பண்டிகையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் முதல் நாளில் பாா்வதி தேவியின் ஓா் அம்சமான இயற்கையின் வடிவாகத் திகழும் மலை மகள் (சைலபுத்ரி) வழிபடப்படுகிறாா்.

X
Dinamani
www.dinamani.com