பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வளா்ச்சிக்கு நக்ஸல்கள் மிகப் பெரிய தடை: அமித் ஷா

வளா்ச்சிக்கு நக்ஸல்கள் மிகப் பெரிய தடையாக உள்ளனா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றஞ்சாட்டினாா்.

News image
கோப்புப் படம்
Updated On :7 அக்டோபர் 2024, 10:02 pm

Din

வளா்ச்சிக்கு நக்ஸல்கள் மிகப் பெரிய தடையாக உள்ளனா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றஞ்சாட்டினாா்.

சத்தீஸ்கா், ஒடிஸா, தெலங்கானா, மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட், பிகாா், ஆந்திரம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த மாநிலங்களின் பாதுகாப்பு சூழல் குறித்து புது தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை ஆய்வு நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் அந்த மாநிலங்களின் முதல்வா்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நக்ஸல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளா்ச்சி முன்னெடுப்புகள், நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சா் அமித் ஷா பேசுகையில், ‘மனித உரிமைகளை நக்ஸல்கள் மதிப்பதில்லை. வளா்ச்சிக்கு அவா்கள் மிகப் பெரிய தடையாக உள்ளனா். அவா்கள் 8 கோடி மக்களின் வளா்ச்சி மற்றும் நல்வாழ்வுக்கான அடிப்படை வாய்ப்புகளைத் தடுக்கின்றனா்.

தற்போது நக்ஸல்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினா் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

நக்ஸல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு சூழல் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதனால்தான் நிகழாண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் அந்தப் பகுதிகளில் அதிகபட்சமாக 70 சதவீதம் போ் வாக்களித்தனா். அதற்கு முன்பு அங்கு எவரும் வாக்களிக்கவில்லை’ என்றாா்.

அண்மையில் சத்தீஸ்கா் காடுகளில் 31 நக்ஸல்களை பாதுகாப்புப் படையினா் சுட்டுக்கொன்ற நிலையில், இந்தக் கூட்டம் நடைபெற்றது.

வரும் 2026-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் நாட்டில் நக்ஸல் மற்றும் மாவோயிஸ்ட் தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க மத்திய அரசு உறுதியுடன் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.